மத்திய பிரதேசத்தில் 2 ஆயிரம் புதிய கோசாலைகள் அமைக்கப்படும்; முதல் மந்திரி அறிவிப்பு


மத்திய பிரதேசத்தில் 2 ஆயிரம் புதிய கோசாலைகள் அமைக்கப்படும்; முதல் மந்திரி அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Nov 2020 3:20 PM GMT (Updated: 22 Nov 2020 3:20 PM GMT)

மத்திய பிரதேசத்தில் 2 ஆயிரம் புதிய கோசாலைகள் அமைக்கப்படும் என முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

போபால்,

மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், பசுவால் கிடைக்க கூடிய பல நன்மைகளை பற்றியும் மற்றும் அதன் உப பொருட்களால் கிடைக்கும் பலன்களை பற்றியும் மக்களுக்கு உணர்த்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் மற்றும் சுற்று சூழலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளை தீர்க்க பசுவை புனித மாதா என அறிவிப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சவுகான், மாநிலத்தில் 7 லட்சம் முதல் 8 லட்சம் வரையிலான ஆதரவற்ற கால்நடைகள் சுற்றி திரிகின்றன.  மத்திய பிரதேச அரசு 2 ஆயிரம் புதிய கோசாலைகளை கட்ட உள்ளது.

அரசுடன் சேர்ந்து, இவற்றில் சில என்.ஜி.ஓ.க்களாலும் நடத்தப்படும்.  இதேபோன்று, மாநிலத்தில் ஊட்டச்சத்து பற்றாக்குறையாக உள்ள குழந்தைகளுக்கு முட்டைகளுக்கு பதிலாக பசும்பால் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

Next Story