டெல்லியில் புதிதாக 6,746- பேருக்கு கொரோனா தொற்று


டெல்லியில் புதிதாக 6,746- பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 22 Nov 2020 5:28 PM GMT (Updated: 22 Nov 2020 5:28 PM GMT)

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 121 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது. டெல்லியில் கொரோனா பரவலின் 3-வது அலை வீசுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டுள்ளது. 

சில கட்டுப்பாடுகளையும் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.  காற்று மாசு, கடும் குளிர் போன்ற காரணங்களாலும் கொரோனா பாதிப்பு வேகம் அதிகரித்துள்ளதாக பரவலாக சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில், டெல்லியில் கடந்த  24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,746- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 6,154 பேர் ஒரே நாளில் குணம் அடைந்த நிலையில், 121 பேர் உயிரிழந்துள்ளனர். 

டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 29 ஆயிரத்து 863- ஆக உள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 81 ஆயிரத்து 260 ஆக உள்ளது.  கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8,391- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 40 ஆயிரம் பேர் தற்போது நிலவரப்படி சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story