இந்திய கடற்படையின் மிக்-29கே ரக பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியது; விமானி மீட்பு


இந்திய கடற்படையின் மிக்-29கே ரக பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியது; விமானி மீட்பு
x
தினத்தந்தி 27 Nov 2020 7:09 AM GMT (Updated: 27 Nov 2020 7:09 AM GMT)

இந்திய கடற்படையின் மிக்-29கே விமானம் அரபி கடலில் விழுந்ததில் ஒரு விமானியை மீட்ட நிலையில் மற்றொரு விமானியை தேடி வருகின்றனர்.

புதுடெல்லி,

இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா விமானந்தாங்கி கப்பலில் இருந்து மிக்-29கே ரக பயிற்சி விமானம் ஒன்று நேற்று புறப்பட்டு சென்றது.

அதில் 2 விமானிகள் இருந்தனர்.  இந்நிலையில், விமானம் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென அரபி கடலில் விழுந்தது.  இதுபற்றிய தகவல் அறிந்து வான் மற்றும் தரைவழி படையினர் மீட்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இதில் விமானி ஒருவர் மீட்கப்பட்டார்.  மற்றொரு விமானியை தேடும் பணி நடந்து வருகிறது.  இந்த விபத்து நடந்தது பற்றி அதிகாரிகள் மட்டத்தில் விசாரணை நடந்து வருகிறது.  கடந்த ஆண்டு நவம்பரில் மிக்-29கே ரக விமானம் ஒன்று கடலில் விழுந்தது.  விசாரணையில் பறவை மோதி விபத்து ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

Next Story