6 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் பண்டிகைக்கு சுப்ரீம் கோர்ட்டு விடுமுறை


6 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் பண்டிகைக்கு சுப்ரீம் கோர்ட்டு விடுமுறை
x
தினத்தந்தி 27 Nov 2020 10:51 PM GMT (Updated: 27 Nov 2020 10:51 PM GMT)

வருகிற ஜனவரி 14-ந்தேதி பொங்கலை முன்னிட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

சுப்ரீம் கோர்ட்டின் 2021-ம் ஆண்டுக்கான விடுமுறை குறித்து நீதிபதிகள் அனைவரும் இணைந்து அண்மையில் முடிவெடுத்தனர். இதையடுத்து, 2021-ம் ஆண்டுக்கான சுப்ரீம் கோர்ட்டு காலண்டர் அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனவரி 1-ந்தேதி புத்தாண்டையொட்டியும், ஜனவரி 14-ந்தேதி மகர சங்ராந்தி, பொங்கல் பண்டிகைகளையொட்டியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கலுக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பி.சதாசிவம் இருந்தபோது, கடந்த 2014-ம் ஆண்டு பொங்கலுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என யோசனை தெரிவிக்கப்பட்டது. அந்த ஆண்டு ஐனவரி மாதம் 14-ந்தேதி மிலாது நபி பண்டிகையின் போது பொங்கல் பண்டிகையும் சேர்ந்து வந்தது. இதையடுத்து 2014-ம் ஆண்டு ஜனவரி 14-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story