கர்நாடகாவில் போதை பொருள் கும்பல் ஆதரவுடன் நீடித்த சித்தராமையா ஆட்சி; பா.ஜ.க. குற்றச்சாட்டு + "||" + Prolonged Chidramaiah rule in Karnataka with drug gang support; BJP Indictment
கர்நாடகாவில் போதை பொருள் கும்பல் ஆதரவுடன் நீடித்த சித்தராமையா ஆட்சி; பா.ஜ.க. குற்றச்சாட்டு
கர்நாடகாவில் போதை பொருள் கும்பல் ஆதரவுடன் 5 ஆண்டு கால ஆட்சியை சித்தராமையா நடத்தினார் என பா.ஜ.க. குற்றச்சாட்டு கூறியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவில் முதல் மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின் கர்நாடக மாநில தலைவராக நளின் குமார் கட்டீல் உள்ளார். அவர், உடுப்பி நகரில் நடந்த கிராம ஸ்வராஜ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
அந்த நிகழ்ச்சியில் கட்டீல் பேசும்பொழுது, இதற்கு முன் கர்நாடகாவில் ஆட்சி செய்த சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் பேசும்பொழுது, ஆட்சி அதிகாரத்தில் சித்தராமையா இருந்தபொழுது, கர்நாடகாவை காங்கிரஸ் ஆளும்பொழுது, மாநிலத்தில் வகுப்புவாத பதற்ற நிலை காணப்பட்டது.
ஆனால், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபின் இந்த பதற்றங்கள் எதுவும் மாநிலத்தில் இல்லை. கர்நாடகாவில் போதை பொருள் கும்பலுக்கு சித்தராமையாவின் பலத்த ஆதரவு இருந்து வந்தது. அந்த கும்பலின் உதவியுடன் அவர் 5 ஆண்டுகள் பதவியில் இருந்து உள்ளார்.
அவர்கள் கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவர் அரசிடம் இதுபற்றி கேள்வி எழுப்பியபோதிலும், போதை பொருள் கும்பலுக்கு எதிராக சித்தராமையா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி வந்தபின் மாநிலத்தில் போதை பொருள் கும்பலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால் அவர்கள் கர்நாடகாவில் போதை பொருள் கடத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என கூறினார்.
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் கொடிகளை காண்பிக்க சிலருக்கு ரூ.1 கோடி பணம் கொடுக்கப்பட்டு உள்ளது என தாக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த என்னை குறிவைத்து அவதூறாக பேசுகிறார்கள் என்று விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசினார்.
கொரோனாவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது என்று தர்மபுரி அருகே நடந்த மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழாவில் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.