முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட பா.ஜ.க.வில் சீட் கிடையாது; கர்நாடக மந்திரி பரபரப்பு பேட்டி


முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட பா.ஜ.க.வில் சீட் கிடையாது; கர்நாடக மந்திரி பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 30 Nov 2020 6:17 AM GMT (Updated: 30 Nov 2020 6:17 AM GMT)

முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட பா.ஜ.க.வில் சீட் வழங்கப்படாது என கர்நாடக மாநில மந்திரி ஈஸ்வரப்பா பரபரப்பு பேட்டி அளித்து உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகாவில் முதல் மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது.  அவரது அமைச்சரவையில் மந்திரியாக இருப்பவர் கே.எஸ். ஈஸ்வரப்பா.

அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்துக்களில் உள்ள எந்தவொரு சமூக பிரிவினருக்கும் தேர்தலில் போட்டியிட நாங்கள் தொகுதி வழங்குவோம்.

அவர் லிங்காயத் பிரிவை சேர்ந்தவராக இருப்பினும், குருபர், ஒக்கலிகர் பிரிவினராக இருப்பினும் அல்லது பிராமணராக இருப்பினும் எங்களுடைய கட்சியில் இருந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு தொகுதி வழங்கப்படும்.  ஆனால் முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட தொகுதி வழங்கப்படாது என கூறியுள்ளார்.

Next Story