எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்
ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபடுகிறது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கிரன் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது.
சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோட்டார் குண்டுகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
Related Tags :
Next Story