4ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகள் ஏலம் விட முடிவு - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
4ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகள் ஏலம் விடும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
4ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகள் ஏலம் விடும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 4ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை 20 ஆண்டுகளுக்கு ஏலம் விடவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது
இதன்படி மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் அடுத்த சுற்று ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் முறைகளுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். அலைக்கற்றைகள் விற்பனைக்கு விண்ணப்பங்களை அழைக்கும் நோட்டீஸ் இந்த மாதம் இறுதியில் வழங்கப்பட உள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளின் மொத்த மதிப்பு ரூ.3,92,332.70 கோடியாகும். இது 700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 2500 மெகா ஹெர்ட்ஸ் வரிசைகளில் ஸ்பெக்ட்ரம் ஏலம் விடும், அவற்றில் சில 4 ஜி சேவைகளுக்கு மிகவும் திறமையானவை என்று கூறப்படுகின்றன. 5G க்கான தொலைதொடர்பு சீராக்கி பரிந்துரைத்த 3300-3600 மெகா ஹெர்ட்ஸ் வரிசைகளில் உள்ள ஸ்பெக்ட்ரம் வரவிருக்கும் ஏலத்தில் சேர்க்கப்படவில்லை.
Related Tags :
Next Story