ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க அனைத்தையும் மோடி அரசு செய்கிறது: அமித்ஷா

ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க அனைத்தையும் மோடி அரசு செய்கிறது: அமித்ஷா
x
தினத்தந்தி 23 Dec 2020 2:42 PM GMT (Updated: 23 Dec 2020 2:58 PM GMT)

ஜம்மு-காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயகத்தை மீட்டெடுக்க மோடி அரசாங்கம் தேவையான எல்லாவற்றையும் செய்து வருகிறது’ என்று தெரிவித்து உள்ளார்.

ஜம்மு, 

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர், முதல் முறையாக அங்கு நடந்த மாவட்ட வளர்ச்சி மன்ற தேர்தலில், 74 இடங்களை கைப்பற்றி பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது.

இதற்காக ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நன்றி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘மாவட்ட வளர்ச்சி மன்ற தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க வாக்களித்த ஜம்மு-காஷ்மீர் சகோதர, சகோதரிகளுக்கு மனமார்ந்த நன்றி. ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு பா.ஜனதா தொடர்ந்து பாடுபடும்.

ஜம்மு-காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயகத்தை மீட்டெடுக்க மோடி அரசாங்கம் தேவையான எல்லாவற்றையும் செய்து வருகிறது’ என்று தெரிவித்து உள்ளார்.

Next Story