தேசிய செய்திகள்

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் + "||" + Pakistani army violates ceasefire on Indian border

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்
காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் இந்திய எல்லைப் பகுதிக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
ஸ்ரீநகர்,

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அவ்வபோது நடைபெற்று வருகின்றன. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இந்திய எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷேரா பகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. சிறிய ரக துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளை பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்ததாகவும் ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இன்று மதியம் 3 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் ரஜோரி மாவட்டத்தில் இந்திய எல்லைப்பகுதிக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்த துவங்கியுள்ளது. இதனையடுத்து இந்திய ராணுவத்தினர் தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்; இந்தியா பதிலடி
பாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பகுதியில் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
2. இந்திய எல்லைப்பகுதிக்குள் நுழைந்த சீன ராணுவ வீரர்; இந்திய ராணுவம் விசாரணை
இந்தியாவின் லடாக் எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த சீன ராணுவ வீரரை இந்திய ராணுவத்தினர் பிடித்தனர்.
3. பஞ்சாப் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பஞ்சாப் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்படனர்
4. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்; இந்திய ராணுவம் பதிலடி
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
5. காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.