கொரோனா தடுப்பூசி போடும் பணி: மாநில அரசுகளுடன் அமித்ஷா நாளை ஆலோசனை


கொரோனா தடுப்பூசி போடும் பணி: மாநில அரசுகளுடன் அமித்ஷா நாளை ஆலோசனை
x
தினத்தந்தி 11 Jan 2021 1:10 PM GMT (Updated: 11 Jan 2021 1:10 PM GMT)

கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

புதுடெல்லி,

கொரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி திட்டம் ஜனவரி 16 முதல் தொடங்கப்பட உள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கான முன்னேற்பாடுகள் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் செய்யப்பட்டு வருகின்றன. 

முதற்கட்டமாக ஒரு கோடி கோவிஷீல்டு தடுப்பூசி கொள்முதலுக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. நாளை காலை முதல் தடுப்பூசிகளை அனுப்பும் பணிகள் நடைபெறும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி பணிகள் தொடங்கவுள்ள நிலையில் அனைத்து மாநில அரசுகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நாளை ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். காணொலி வாயிலாக நடைபெறும் இக்கூட்டத்தில் மாநில முதல்-மந்திரிகள் அல்லது அமைச்சர்கள் இதில் பங்கேற்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமித்ஷா, இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றார். 

Next Story