வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை காங். ஓயாது: ராகுல் காந்தி திட்டவட்டம்


வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை காங். ஓயாது: ராகுல் காந்தி திட்டவட்டம்
x
தினத்தந்தி 15 Jan 2021 10:12 AM GMT (Updated: 15 Jan 2021 10:12 AM GMT)

பாஜக அரசு கண்டிப்பாக வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகைக்கு பேரணியாக சென்று முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் கட்சியினர் அறிவித்திருந்தனர்.  இதையடுத்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர். 

இந்த பேரணியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  இந்தப் பேரணிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தலைமை வகித்தார். பேரணிக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ராகுல் காந்தி கூறியதாவது: -

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு உதவுவதற்காக கொண்டு வரப்படவில்லை. அவர்களை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.பாஜக அரசு கண்டிப்பாக இந்தச் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை காங்கிரஸ் கட்சி ஓயாது” என்றார்.


Next Story