தேசிய செய்திகள்

இமாசல பிரதேசத்தில் வரும் பிப்.1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு + "||" + Schools in Himachal Pradesh to partially open from February

இமாசல பிரதேசத்தில் வரும் பிப்.1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு

இமாசல பிரதேசத்தில் வரும் பிப்.1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு
இமாசல பிரதேசத்தில் வரும் பிப்.1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
சிம்லா,

கொரோனா தொற்று பரவல் குறையத் தொடங்கியுள்ள நிலையில், இமாசல   பிரதேசத்தில் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் பகுதியளவில் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. மாநிலங்களின் தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இமாசல பிரதேசத்தில் 5, 8 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில பள்ளிக்கல்வித் துறை வெள்ளிக்கிழமை அறிவித்தது. மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகள் பிப்ரவரி 15 முதல் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கு பிப்ரவரி 28 வரை நீட்டிப்பு- பிப்ரவரி 8 முதல் கல்லூரிகள் திறக்க அனுமதி
தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கு பிப்ரவரி 28 நள்ளிரவு வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
2. ஆந்திராவில் நவம்பர் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு
ஆந்திர மாநிலத்தில் நவம்பர் 2 முதல் ஒவ்வொரு வகுப்புக்கும் மாற்று நாட்களில் பாடம் நடத்தப்படும் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
3. இமாச்சல பிரதேசத்தில் புதிதாக 170- பேருக்கு கொரோனா
இமாச்சல பிரதேசத்தில் புதிதாக 170- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இமாசல பிரதேசத்தில் உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை: அக்டோபர் 3-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
இமாசல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையை அக்டோபர் 3-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.