தேசிய செய்திகள்

தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது வரலாற்று சாதனை; அமித்ஷா பாராட்டு + "||" + The historic achievement of starting the vaccination process; Amitsha compliment

தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது வரலாற்று சாதனை; அமித்ஷா பாராட்டு

தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது வரலாற்று சாதனை; அமித்ஷா பாராட்டு
தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது வரலாற்று சாதனை என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டு தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் என்று சொல்கிற வகையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

அதன்படி நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது ஒரு வரலாற்று சாதனை என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘உலகின் மிகப்பெரிய தடுப்பூசி பிரசாரம் இந்திய விஞ்ஞானிகளின் மகத்தான ஆற்றலையும் நமது தலைமையின் சக்தியையும் காட்டுகிறது. மனிதகுலத்திற்கு எதிரான மிகப்பெரிய நெருக்கடிக்கு எதிராக போரில் வெற்றி பெற்ற சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும், இந்த வரலாற்று சாதனை குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படுகிறார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசி உலக மன்றத்தில் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை குறிக்கிறது என்றும் பிரதமர் மோடி தலைமையிலான இந்த புதிய இந்தியா பேரழிவுகளை வாய்ப்புகளாகவும், சவால்களை சாதனைகளாகவும் மாற்றும் ஒரு இந்தியா என்றும் அமித்ஷா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய அணிக்கு பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பாராட்டு
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, இந்திய கிரிக்கெட் அணிக்கு ‘டுவிட்டர்’ மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
2. கூட்டத்தில் இருந்து பாதியில் எழுந்து வந்து மாற்றுத்திறனாளி பெண்களிடம் மனு வாங்கிய போலீஸ் சூப்பிரண்டு பொதுமக்கள் பாராட்டு
கூட்டத்தில் இருந்து பாதியில் எழுந்து வந்து மாற்றுத்திறனாளி பெண்களிடம் மனு வாங்கிய போலீஸ் சூப்பிரண்டை பொதுமக்கள் பாராட்டினர்.
3. விவசாய முன்னேற்றங்களுக்கு வழிநடத்தும் திறன் படைத்தவை; வேளாண் சட்டங்களுக்கு சர்வதேச நிதியம் பாராட்டு
வேளாண் சட்டங்களுக்கு சர்வதேச நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த சட்டங்கள், விவசாய சீர்திருத்தங்களுக்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் திறனை கொண்டு இருக்கின்றன என அந்த அமைப்பு கூறி உள்ளது.
4. நாட்டிலேயே இளம் பெண் மேயராக தேர்வான ஆர்யாவுக்கு நடிகர் மோகன்லால் பாராட்டு
நடிகர் மோகன்லால் நாட்டிலேயே இளம் பெண் மேயராக தேர்வான ஆர்யா ராஜேந்திரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டுகளை தெரிவித்து உள்ளார்.
5. ஓடும் ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது ஊழியர்களுக்கு உறவினர்கள் பாராட்டு
ஒரத்தநாடு அருகே ஓடும் ஆம்புலன்சில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது