தேசிய செய்திகள்

நேதாஜி பிறந்தநாள் ‘துணிச்சல் தினம்’ ஆக கொண்டாடப்படும்; மத்திய அரசு அறிவிப்பு + "||" + Netaji's birthday will be celebrated as 'Bravery Day'; Federal Government Notice

நேதாஜி பிறந்தநாள் ‘துணிச்சல் தினம்’ ஆக கொண்டாடப்படும்; மத்திய அரசு அறிவிப்பு

நேதாஜி பிறந்தநாள் ‘துணிச்சல் தினம்’ ஆக கொண்டாடப்படும்; மத்திய அரசு அறிவிப்பு
நேதாஜி பிறந்தநாள் ‘துணிச்சல் தினம்’ ஆக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
புதுடெல்லி,

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125-வது பிறந்தநாள், வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அந்த நாளை துணிச்சல் தினமாக (பராக்கிரம் திவாஸ்) கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை மத்திய மந்திரி பிரகலாத் சிங் ஜோஷி அறிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

23-ந் தேதி கொல்கத்தாவில் நடக்கும் முதலாவது துணிச்சல் தின விழாவில், பிரதமர் மோடி பங்கேற்கிறார். தேசிய நூலக மைதானத்தில் நேதாஜி தொடர்பான கண்காட்சியை திறந்து வைக்கிறார். நேதாஜி அமைத்த இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் மோடி கவுரவிக்கிறார்.

நேதாஜியின் 125-வது பிறந்தநாளை ஓராண்டு முழுவதும் கொண்டாடுவதற்கான திட்டங்களை வகுக்க பிரதமர் தலைமையில் 85 பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு; இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் தரங்கா அறிவிப்பு
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் உபுல் தரங்கா சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை வெளியிட்டார்.
2. பிரதமர் மோடிக்கு கடிதம் எதிரொலி; மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து தடை இல்லை: கர்நாடகா அறிவிப்பு
பிரதமர் மோடிக்கு கேரள முதல் மந்திரி கடிதம் எழுதியதன் எதிரொலியாக மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு தடை இல்லை என கர்நாடகா அறிவித்து உள்ளது.
3. மராட்டிய பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம்; மத்திய பிரதேச அரசு அறிவிப்பு
மராட்டியத்தில் இருந்து வருபவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம் என மத்திய பிரதேச அரசு அறிவித்து உள்ளது.
4. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள், டி20 போட்டிகளுக்கான இலங்கை அணி அறிவிப்பு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
5. விமானம் மூலம் துபாய் திரும்புபவர்களுக்கு குடியுரிமை, வெளிநாட்டினர் விவகாரத்துறையிடம் முன் அனுமதி பெற தேவையில்லை எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவிப்பு
விமானம் மூலம் துபாய் திரும்புபவர்களுக்கு குடியுரிமை, வெளிநாட்டினர் விவகாரத்துறையிடம் முன் அனுமதி பெற தேவையில்லை எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவிப்பு.