இந்தியா 20 லட்சம் கோடி அளவுக்கு உற்பத்தியை விரிவாக்கம் செய்யும்: மத்திய மந்திரி உரை


இந்தியா 20 லட்சம் கோடி அளவுக்கு உற்பத்தியை விரிவாக்கம் செய்யும்:  மத்திய மந்திரி உரை
x
தினத்தந்தி 10 Feb 2021 1:26 AM GMT (Updated: 10 Feb 2021 1:26 AM GMT)

இந்தியா 20 லட்சம் கோடி அளவுக்கு உற்பத்தியை விரிவாக்கம் செய்யும் என மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

புதுடெல்லியில் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் காணொலி காட்சி வழியே ஊடங்களிடம் உரையாடினார்.  அவர் கூறும்பொழுது, 2021-22ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டானது, தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கவும், சர்வதேச வர்த்தகம் மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகம் ஆகியவற்றை மேற்கொள்ளும் நபர்களுக்கு வர்த்தக நம்பிக்கையை மேம்படுத்துதல் ஆகியவற்றை கொண்டுள்ளது என உறுதி தெரிவித்து உள்ளார்.

உற்பத்தி தொடர்புடைய ஊக்கமளிக்கும் தொடர் அறிவிப்புகளால் ரூ.20 லட்சம் கோடிக்கான உற்பத்தி சார்ந்த விரிவாக்கங்களுக்கான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

மத்திய பட்ஜெட்டானது சீர்திருத்தம் மற்றும் ஆதரவு நடவடிக்கைகளை கொண்டு வந்துள்ளது.  ஊரடங்கு தளர்வுக்கு பின்னான காலகட்டத்தில் தொழில்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் வகையில் நிதி சார்ந்த திட்டங்களை கொண்டுள்ளன என கூறியுள்ளார்.

Next Story