எல்லை மோதல் நடந்த இடங்களை பார்வையிட நாடாளுமன்ற குழு, லடாக் செல்கிறது


எல்லை மோதல் நடந்த இடங்களை பார்வையிட நாடாளுமன்ற குழு, லடாக் செல்கிறது
x
தினத்தந்தி 14 Feb 2021 10:17 AM GMT (Updated: 14 Feb 2021 10:17 AM GMT)

லடாக்கில் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன படைகளின் தொடர் அத்துமீறலால் இந்திய படைகள் பதிலடி கொடுத்தன.

அதைத் தொடர்ந்து இரு தரப்பு மோதல்கள் வலுத்தன. இரு தரப்பும் படைகளையும், தளவாடங்களையும் குவித்தன. இதனால் போர்ப்பதற்றம் நிலவி வந்தது. தற்போது அங்கு படைகளை திரும்பப்பெற இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.

இந்த நிலையில் பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் சிலர் லடாக் சென்று, கல்வான் பள்ளத்தாக்கு, பாங்கோங் ஏரி உள்ளிட்ட மோதல் நடந்த இடங் களை பார்வையிட்டு ஆய்வு செய்ய திட்டமிட்டு உள்ளனர். இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்துடன் கலந்து ஆலோசனை செய்து, நிலைக்குழுவின் தலைவர் ஜூவல் ஓரன் (பா.ஜ.க.) முடிவு எடுப்பார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலைக்குழுவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காஙகிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Next Story