பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல் : காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி


பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல் : காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி
x
தினத்தந்தி 17 Feb 2021 1:22 PM GMT (Updated: 17 Feb 2021 1:22 PM GMT)

பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.

அமிர்தசரஸ்

பஞ்சாப் மாநிலத்தில், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில், ஆளும் காங்கிரஸ்  அதிக இடங்களில்  வெற்றி பெற்றுள்ளது. பதான்கோட், பாதின்டா, ஹோசியார்பூர், மோகா, கபூர்தலா உள்ளிட்ட 7 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், அனைத்திலும், காங்கிரஸ் வெற்றிப்பெற்றுள்ளது.

53 ஆண்டுகளுக்குப் பிறகு, பாதின்டா மாநகராட்சியை, காங்கிரஸ் கைப்பற்றியிருக்கிறது. 80 நகராட்சி தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், 65 நகராட்சிகளை காங்கிரசும், 10ல் சுயேட்சைகளும், 5ல் சிரோன்மணி அகாலிதளமும் வென்றுள்ளன. பாஜக, ஆம் ஆத்மி கட்சிகள், பெரும் பின்னடவை எதிர்கொண்டுள்ளன. 

மால்வாவில் உள்ள பெரோஸ்பூர் மற்றும் ஜிரா நகராட்சி மன்றங்களில், காங்கிரஸ் அனைத்து இடங்களையும் வென்றது. ஜலாலாபாத், அரின்வாலா மற்றும் பாசில்காவின் சிரோன்மணி கோட்டைகளிலும் மிகப் பெரிய வெற்றியை பெற்று உள்ளது.

லூதியானா மாவட்டத்தில் கன்னா, ஜாக்ரான், சாம்ராலா, ரெய்கோட், டோராஹா, பயல் மற்றும் சஹ்னேவால் ஆகிய நகராட்சி மன்றங்களில் காங்கிரஸ் பெரும்பான்மையைப் பெற்றது.

Next Story