கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் : உத்தவ் தாக்கரே


கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் : உத்தவ் தாக்கரே
x
தினத்தந்தி 21 Feb 2021 2:44 PM GMT (Updated: 21 Feb 2021 2:44 PM GMT)

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மராட்டியத்தின் சில இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று மராட்டிய அரசு வலியுறுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மராட்டியத்தில் இன்று சுமார் 7 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். உத்தவ் தாக்கரே மேலும் கூறுகையில், மாநிலத்தில் நிலைமை மேலும் மோசமானால்  ஊரடங்கு அமல்படுத்தப்படும்.  ஊரடங்கை விரும்புவர்கள் மாஸ்க் இன்றி தாராளமாக சுற்றலாம். ஊரடங்கு வேண்டாம் என்று கருதுபவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்” என்றார். 

Next Story