கர்நாடகாவில் புதிதாக 317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - மாநில சுகாதாரத்துறை தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 Feb 2021 7:32 PM GMT (Updated: 22 Feb 2021 7:32 PM GMT)

கர்நாடகாவில் புதிதாக 317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் புதிதாக 317 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 48 ஆயிரத்து 466 ஆக உயர்ந்து உள்ளது. 

மேலும் 5 பேர் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்ததையடுத்து, இதுவரை மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 299 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று 287 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதனால் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 30 ஆயிரத்து 87 ஆக உயர்ந்து உள்ளது. 6 ஆயிரத்து 61 பேர் சிகிச்சையில் உள்ளனர். 128 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

மேலும் கர்நாடகத்தில் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10-க்கும் கீழ் பதிவாகி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. பெலகாவி, சாம்ராஜ்நகர், கதக், கொப்பல், ராய்ச்சூர், ராமநகர், உத்தர கன்னடா, யாதகிரி ஆகிய 8 மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை. 27 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. நேற்று 45 ஆயிரத்து 868 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. ஒட்டுமொத்தமாக இதுவரை 1 கோடியே 83 லட்சத்து 80 ஆயிரத்து 495 பேருக்கு சோதனை நடந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story