வாழ்க்கையில் வெற்றி பெற பிரதமர் சொன்ன 3 மந்திரங்கள்; கரக்பூர் ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் பேச்சு + "||" + 3 mantras uttered by the Prime Minister to succeed in life; Kharagpur IIT Speech at the graduation ceremony
வாழ்க்கையில் வெற்றி பெற பிரதமர் சொன்ன 3 மந்திரங்கள்; கரக்பூர் ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் பேச்சு
கரக்பூர் ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, வாழ்க்கையில் வெற்றி பெற 3 மந்திரங்களை தெரிவித்தார்.
பட்டமளிப்பு விழா
மேற்கு வங்காள மாநிலம் காரக்பூர் ஐ.ஐ.டி.யின் 66-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. தங்கம், வெள்ளி பதக்கங்கள் பெற்ற 75 மாணவர்களுக்கு மட்டும் நேரடியாக பட்டங்கள் வழங்கப்பட்டன. 2 ஆயிரத்து 800-க்கு மேற்பட்டவர்களுக்கு காணொலி காட்சி மூலம் வழங்கப்பட்டன. டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா, டெல்லி மெட்ரோ ரெயில் கழகத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஈ.ஸ்ரீதரன் உள்பட 27 சாதனையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பேசினார். அவர் பேசியதாவது:-
தன்னம்பிக்கை
பட்டம் பெற்று செல்லும் மாணவர்கள், தங்களுக்கென புதிய வாழ்க்கையை தொடங்குவது மட்டுமின்றி, பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றும் பணியையும் தொடங்க வேண்டும். அவர்கள் பெற்ற பதக்கங்களும், விருதுகளும் மக்களின் கோரிக்கை பட்டியல் போன்றவை. அவற்றை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். 21-ம் நூற்றாண்டின் விருப்பங்கள் மாறி விட்டதால், ஐ.ஐ.டி.கள் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்பட வேண்டும்.
மாணவர்கள், வாழ்க்கையில் வெற்றி பெற 3 மந்திரங்களை கடைப்பிடிக்க வேண்டும். சுய விழிப்புணர்வு, தன்னம்பிக்கை, சுயநலம் இல்லாமை ஆகியவைதான் அந்த மந்திரங்கள்.
விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளியே கிடையாது. ஒருவர் புதிய கண்டுபிடிப்பில் வெற்றிபெறாவிட்டால் கூட தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளலாம்.
சூரியசக்தி விலை குறைவு
பருவநிலை மாற்றம் இப்போது உலகத்துக்கே சவாலாக உருவெடுத்துள்ளது. அதற்கு சர்வதேச சோலார் கூட்டணி அமைக்கும் யோசனையுடன் இந்தியா முன்வந்துள்ளது. சூரிய சக்தியின் விலை மிகவும் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.இருப்பினும், அதை வீடு, வீடாக கொண்டு சேர்க்கும் சவால்கள் இருக்கின்றன.
இங்கிலாந்தில் கடந்த 1940 முதல் 1945 வரை பிரதமராக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில். அரசியல்வாதி, ராணுவ அதிகாரி, எழுத்தாளர் என பன்முகங்களை கொண்ட இவர் சிறந்த ஓவியராகவும் திகழ்ந்து வந்தார்.
சென்னை வந்துள்ள பிரதமரிடம் மதுரை எய்ம்ஸ், நீட் விலக்கு, 7 பேர் விடுதலை உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் பழனிசாமி கேட்பாரா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருவதையொட்டி இன்று (சனிக்கிழமை) பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. பாதுகாப்புக்காக 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்படுகிறார்கள்.