ஆந்திர பிரதேசத்தில் 2 கட்சி தொண்டர்களிடையே மோதல்; 16 பேர் காயம்


ஆந்திர பிரதேசத்தில் 2 கட்சி தொண்டர்களிடையே மோதல்; 16 பேர் காயம்
x
தினத்தந்தி 24 Feb 2021 12:52 AM GMT (Updated: 24 Feb 2021 12:52 AM GMT)

ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் மற்றும் யுவஜன ஸ்ரமிகா ரித்து காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலில் 16 பேர் காயமடைந்தனர்.

ஸ்ரீகாகுளம்,

ஆந்திர பிரதேசத்தில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.  இந்நிலையில் சமீபத்தில் அங்கு நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தல் தொடர்புடைய சமூக ஊடக பதிவுகளால் தெலுங்கு தேசம் மற்றும் யுவஜன ஸ்ரமிகா ரித்து காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிடையே மோதல் உருவானது.

இதில் ஸ்ரீகாகுளம் நகரில் மெட்டவலசா கிராமத்தில் இரு கட்சி தொண்டர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.  இதில் 16 பேர் காயமடைந்தனர்.  அவர்கள் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து கிராமத்தில் வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக கூடுதல் போலீஸ் படை குவிக்கப்பட்டு உள்ளது என துணை ஆய்வாளர் அகமது கூறியுள்ளார்.

Next Story