தேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் -தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா


தேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் -தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
x
தினத்தந்தி 26 Feb 2021 11:46 AM GMT (Updated: 26 Feb 2021 11:46 AM GMT)

தேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறி உள்ளார்.

புதுடெல்லி

தமிழகத்திற்கு இதுவரை மொத்தம் 15 சட்டமன்ற பொதுத்தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. இந்த ஆண்டு (2021) நடை பெற இருப்பது 16 சட்டமன்ற பொதுத் தேர்தல் ஆகும். 

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் அட்டவணையை வெளியிடுகிறார். அதற்காக அவர் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்து வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

சுமார் 88ஆயிரம் வாக்குச் சாவடிகள் தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளன

கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் சுகாதாரத்துறை மூலம் பிரச்சினைகளை சமாளித்து வருகிறோம். தேர்தலை சுமுகமாக நடத்துவதில் மருத்துவர்கள், செவிலியர்கள், அதிகாரிகளுக்கு பெரும் பங்கு உள்ளது. தேர்தல் பணி ஈடுபடும் ஊழியர்கள், கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு தலைவணங்குகிறோம். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் முந்தைய தேர்தல்களை விட 57 சதவீத  வாக்குகள் பதிவாகின. பீகாரில் பெருமளவு பெண்கள் வாக்களித்தனர்.

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்களிக்கும் முறை ஒரு வாய்ப்பாகவே வழங்கப்படுகிறது

வேட்பாளருடன் சேர்த்து 5 பேர் மட்டுமே வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க அனுமதி 

5 வாகனங்களுக்கு மேல் சென்று பிரசாரம் செய்ய அனுமதி இல்லை

தேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழக சிறப்பு தேர்தல் அதிகாரியாக அலோக் வரதன் நிய-மனம்

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதலே தேர்தல் ஏற்பாடுகளை துவங்கி கண்காணித்து வருகிறோம்.

வாக்குசாவடிகள் அனைத்தும் தரை தளத்தில் அமைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்

Next Story