தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இன்றும் 8 ஆயிரத்திற்கும் மேலாக கொரோனா பாதிப்பு + "||" + Maharashtra records over 8,000 fresh Covid-19 cases again, 1,035 cases in Mumbai

மராட்டியத்தில் இன்றும் 8 ஆயிரத்திற்கும் மேலாக கொரோனா பாதிப்பு

மராட்டியத்தில் இன்றும் 8 ஆயிரத்திற்கும் மேலாக கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் இன்று 8 ஆயிரம் பேருக்கு மேலாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக  கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.  இதனால், தொற்று பாதிப்பு அதிகம் காணப்படும் சில மாவட்டங்களில்  இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது மராட்டிய மாநில மக்களுக்கு கவலையை அளித்துள்ளது. மக்கள் கொரோனா தடுப்பு  விதிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும் என்று மாநில அரசு கூறி வருகிறது.

இந்த நிலையில், மராட்டியத்தில் தொடர்ந்து 3-வது நாளாக கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகியுள்ளது. இன்று 8 ஆயிரத்து 333- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 21 லட்சத்து 38 ஆயிரத்து 154- ஆக கொரோனா பாதிப்பு உள்ளது.  

மும்பையில் இன்று 1,035- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 48-பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன்  67 ஆயிரத்து 608- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மலேசியாவில் மேலும் 2,551- பேருக்கு கொரோனா
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,551- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லியில் வார இறுதி நாள் ஊரடங்கு அமலுக்கு வந்தது- போலீசார் தீவிர கண்காணிப்பு
டெல்லியில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. இதனால், பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
3. நடிகர் பவன் கல்யாணுக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு
நடிகர் மற்றும் ஜனசேனா கட்சியின் தலைவரான பவன் கல்யாணுக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. தடுப்பூசி போட்ட போலீஸ்காரருக்கு கொரோனா
தேனி மாவட்டம் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவருக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
5. மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.