டெல்லியில் 76 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகபட்ச வெப்பநிலை


File photo: PTI
x
File photo: PTI
தினத்தந்தி 29 March 2021 6:49 PM GMT (Updated: 29 March 2021 6:49 PM GMT)

டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 104.18 டிகிரி பாரன்ஹீட்டாக (40.1 டிகிரி செல்சியஸ்) பதிவாகி இருந்தது.

புதுடெல்லி,

அனல் வீசும் கோடை காலம் இன்னும் தொடங்கவில்லை. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிறப்பதற்கு முன்பே வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று தலைநகர் டெல்லியில் சப்தர்ஜங் பகுதியில் உள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், வெயில் அளவை வெளியிட்டது. அது அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்திருந்தது.

டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 104.18 டிகிரி பாரன்ஹீட்டாக (40.1 டிகிரி செல்சியஸ்) பதிவாகி இருந்தது. இந்த அளவு, இயல்புநிலையை விட மிக அதிகம் ஆகும். அனல் காற்று வீசியது. டெல்லியில் நேற்று ‘ஹோலி’ பண்டிகை கொண்டாடிய நேரத்தில் இப்படி வெயில் வாட்டி வதைத்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆராய்ச்சி மைய மண்டல வானிலை மையத்தின் தலைவர் குல்தீப் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ‘‘கடந்த 1945-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி, டெல்லியில் 104.7 டிகிரி வெயில் பதிவானது. அதன்பிறகு கடந்த 76 ஆண்டுகளில் மார்ச் மாதத்தில் டெல்லியில் இவ்வளவு அதிகமான வெயில் பதிவானது இதுவே முதல்முறை’’ என்றார்.


Next Story