கொரோனா அதிகரிப்பு; காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்
காஷ்மீரில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதால், மேல்நிலைப் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
9-ம் வகுப்புக்கான பாடவகுப்புகள் 2 வாரங்களும், 10, 11, 12-ம் வகுப்புக்கான பாட வகுப்புகள் ஒரு வாரத்துக்கும் மூடப்படும் என்று கவர்னர் மனோஜ் சின்கா, நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவு இன்று (திங்கள்) முதல் அமலுக்கு வருகிறது. காஷ்மீரில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், பள்ளிகள் ஏப்ரல் 21-ந் தேதி வரை மூடப்படுகிறது என்று கவர்னர் சின்கா கூறி உள்ளார். ‘200
பேர்களுக்கு அதிகமாக கூடும் சமூக நிகழ்வுகள், கூட்டங்களுக்கு அனுமதியில்லை’ என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story