‘ரபேல்’ விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை; பிரான்ஸ் விமான உற்பத்தி நிறுவனம் மறுப்பு


‘ரபேல்’ விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை; பிரான்ஸ் விமான உற்பத்தி நிறுவனம் மறுப்பு
x
தினத்தந்தி 9 April 2021 3:15 AM GMT (Updated: 9 April 2021 3:15 AM GMT)

‘ரபேல்’ விமான பேரத்துக்காக, இந்தியாவை சேர்ந்த ஒரு இடைத்தரகருக்கு 10 லட்சம் யூரோ (ஐரோப்பிய பணம்) லஞ்சமாக கொடுக்கப்பட்டதாக ஒரு பிரான்ஸ் நாட்டு ஊடகம் சமீபத்தில் தெரிவித்தது.

இந்தநிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு ‘ரபேல்’ விமானங்களை உற்பத்தி செய்யும் டசால்ட் ஏவியேசன் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:-

கடந்த 2000-களின் தொடக்கத்தில் இருந்தே எங்கள் நிறுவனம் ஊழலை தடுக்க கடுமையான நடைமுறைகளை அமல்படுத்தி வருகிறது. தொழில், வர்த்தக உறவுகளில் நேர்மை, தூய்மை மற்றும் நற்பெயருக்கு உத்தரவாதம் அளித்து வருகிறது. சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது.

அத்துடன், பிரான்ஸ் ஊழல் ஒழிப்புதுறை உள்ளிட்ட அரசு அமைப்புகளும் நிறைய கட்டுப்பாடுகளை விதித்தன. எனவே, இந்தியாவுடனான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடுகளோ, விதிமீறல்களோ நடக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

 


Next Story