மேற்கு வங்காள 5வது கட்ட தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளருக்கு கொரோனா தொற்று


மேற்கு வங்காள 5வது கட்ட தேர்தல்:  பா.ஜ.க. வேட்பாளருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 12 April 2021 7:40 AM GMT (Updated: 12 April 2021 7:58 AM GMT)

மேற்கு வங்காளத்தில் 5வது கட்ட சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

டார்ஜிலிங்,

மேற்கு வங்காள சட்டசபைக்கான தேர்தல் 8 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.  வருகிற 17ந்தேதி 5வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.  மொத்தம் 45 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள மதிகரா-நக்சல்பாரி சட்டசபை தொகுதியும் ஒன்று.

இந்த தொகுதிக்கான பா.ஜ.க. வேட்பாளராக அனந்தமய் பர்மன் போட்டியிடுகிறார்.  பள்ளி ஆசிரியரான அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால், அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இதனால், அவருக்கு பதிலாக மாவட்ட தலைவர் பிரவீன் அகர்வால் மற்றும் கட்சி தொண்டர்கள் தேர்தல் பிரசார பணிகளை கவனித்து கொள்கின்றனர்.

Next Story