டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 11,491- பேருக்கு கொரோனா


டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 11,491- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 April 2021 3:03 PM GMT (Updated: 12 April 2021 3:03 PM GMT)

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 11,491- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பரவல் கடந்த சில  நாட்களாக மின்னல் வேகத்தில் உள்ளது. டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “ டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில்11,491- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

தொற்று பாதிப்பால் இன்று மட்டும் 72- பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 36 ஆயிரத்து 688- ஆக உள்ளது. இன்று மட்டும் சுமார் 92 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

தொற்று பாதிப்பில் இருந்து 7,665- பேர் இன்று குணம் அடைந்துள்ளனர். டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 12.44 % ஆக உள்ளது. 

Next Story