கொரோனா தொற்று அதிகரிப்பு: அரியானாவில் இரவு நேர ஊரடங்கு அமல்


கொரோனா தொற்று அதிகரிப்பு: அரியானாவில் இரவு நேர ஊரடங்கு அமல்
x
தினத்தந்தி 12 April 2021 3:04 PM GMT (Updated: 12 April 2021 3:04 PM GMT)

கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு காரணமாக அரியானா மாநிலத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சண்டிகர்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், அரியானாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் அம்மாநிலத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அரியானா உள்துறை மந்திரி அனில் விஜி தெரிவித்துள்ளார்.

அரியானாவில் இதுவரை 3 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, நேற்று ஒரேநாளில் 3 ஆயிரத்து 268 பேருக்கு புதிதாக தொற்று பரவியுள்ளது.மேலும், அம்மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு 3 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story