தேசிய செய்திகள்

கொரோனா தொற்று உயர்வு; குஜராத்தில் 10, 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைப்பு + "||" + Corona infection hike; 10, 12th exams postponed in Gujarat

கொரோனா தொற்று உயர்வு; குஜராத்தில் 10, 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைப்பு

கொரோனா தொற்று உயர்வு; குஜராத்தில் 10, 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைப்பு
கொரோனா தொற்று உயர்வால் குஜராத்தில் மே 15ந்தேதி அடுத்த அறிவிப்பு வெளியிடும் வரை 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன.
காந்திநகர்,

குஜராத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் வருகிற மே 10 மற்றும் 25ந்தேதிகளுக்கு இடையில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.  இந்நிலையில், கொரோனா தொற்று உயர்வால் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை ஒத்தி வைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதுபற்றி முதல் மந்திரி விஜய் ரூபானி அலுவலகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், 1 முதல் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்படுவர்.

இதேபோன்று, மே 15ந்தேதி கொரோனா பாதிப்பு நிலைமை பற்றி ஆய்வு செய்த பின்னர் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகளுக்கான புதிய தேதி பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்து உள்ளது.

குஜராத்தில் தனது 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வை சி.பி.எஸ்.இ. ரத்து செய்ததுடன், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வையும் ஒத்தி வைத்தது.

இதனை தொடர்ந்தே 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வை ஒத்தி வைக்க அரசு முடிவு செய்துள்ளது.  அரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், இமாசல பிரதேசம் மற்றும் மராட்டிம் போன்ற பிற மாநிலங்களிலும் மாநில வாரிய தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற மேலவை 2.30 மணிவரை ஒத்தி வைப்பு
நாடாளுமன்ற மேலவையில் எம்.பி.க்களின் அமளியால் அவை 2.30 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
2. எதிர்க்கட்சிகள் அமளி; நாடாளுமன்ற மேலவை 2 மணிவரை ஒத்தி வைப்பு
நாடாளுமன்ற மேலவையில் எம்.பி.க்களின் அமளியால் அவை 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.
3. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்தி வைப்பு
கொரோனா பெருந்தொற்று சூழ்நிலையால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.