மராட்டியத்தில் மேலும் 63,729 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி


மராட்டியத்தில் மேலும் 63,729 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
x
தினத்தந்தி 16 April 2021 7:33 PM GMT (Updated: 16 April 2021 7:33 PM GMT)

மராட்டிய மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 63 ஆயிரத்து 729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, மராட்டிய மாநிலத்தில் கொரோனா பரவல் உச்சமடைந்து வருகிறது. இந்நிலையில், மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவலின் நேற்றைய நிலவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, மராட்டியத்தில் நேற்று ஒரேநாளில் 63 ஆயிரத்து 729 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 37 லட்சத்து 3 ஆயிரத்து 584 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 லட்சத்து 38 ஆயிரத்து 34 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்தில் வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்றவர்களில் நேற்று ஒரேநாளில் 45 ஆயிரத்து 335 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 30 லட்சத்து 4 ஆயிரத்து 391 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் நேற்று 398 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 59 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது.  

இதற்கிடையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மராட்டியத்தில் கடந்த 14-ம் தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு மே 1-ம் தேதி வரை அமலில் இருக்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் உரிய காரணங்கள் இன்றி பொதுஇடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story