மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று உறுதி


மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 17 April 2021 1:26 AM GMT (Updated: 17 April 2021 1:26 AM GMT)

மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் உச்சமடையத்தொடங்கியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 2 லட்சத்து 17 ஆயிரத்து 353 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,42,91,917 ஆக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது மக்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி, பாஜக மூத்த தலைவருமான பிரகாஷ் ஜவடேகருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 முதல் 3 நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ஜவடேகர் கடந்த 5-ம் தேதி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story