தேசிய செய்திகள்

மராட்டியத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைவு + "||" + 58,924 new COVID19 cases, 52,412 recoveries and 351 deaths reported in Maharashtra today; case tally reaches 38,98,262, death toll 60,824

மராட்டியத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைவு

மராட்டியத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைவு
மராட்டியத்தில் இன்று மேலும் 58,924 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மராட்டியத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

அதன்படி, மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று மேலும் 58,924பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 38,98,262 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 351 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60,473 ஆக அதிகரித்துள்ளது.

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 52,412 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31,59,240 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை மாநிலத்தில் 6,76,520 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது
மராட்டியத்தில் இன்று மேலும் 26,616 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கேரளாவில் புதிதாக 21,402 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - 87 பேர் உயிரிழப்பு
கேரளாவில் புதிதாக 21,402 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
3. ஆந்திர பிரதேசம்: கொரோனாவால் அனாதையான ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.10 லட்சம் டெபாசிட்
ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்புக்கு பெற்றோரை இழந்து ஆதரவற்ற ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்யப்பட உள்ளது.
4. டெல்லியில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 4,524 பேருக்கு தொற்று உறுதி
டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
5. கர்நாடகாவில் மே31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு
கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.