தேசிய செய்திகள்

தேசியவாத காங்.தலைவர் சரத்பவாருடன் சஞ்சய் ராவத் திடீர் சந்திப்பு + "||" + Sena's Sanjay Raut Meets Sharad Pawar; Discusses Covid Situation

தேசியவாத காங்.தலைவர் சரத்பவாருடன் சஞ்சய் ராவத் திடீர் சந்திப்பு

தேசியவாத காங்.தலைவர் சரத்பவாருடன் சஞ்சய் ராவத் திடீர் சந்திப்பு
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் திடீரென சந்தித்து பேசினார்.
மும்பை, 

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசு தவறிவிட்டதாக பா.ஜனதா குற்றம்சாட்டி உள்ளது. இதேபோல பா.ஜனதா மாநிலத்தில் சுகாதார மற்றும் சட்டம்-ஒழுங்கை குலைக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக சிவசேனா குற்றம்சாட்டி இருக்கிறது. இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. நேற்று மும்பையில் அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு அவர் கூறியதாவது:-

அரசியல் நிலவரம் குறித்து நான் ஏன் சரத்பவாருடன் பேசக்கூடாது?. சரத்பவார் மிகப்பெரிய அரசியல் தலைவர். நாங்கள் அரசியலில் உள்ளோம். எனவே அரசியல் குறித்தும் பேசினோம். சரத்பவார் கொரோனா பரவல் குறித்து கவலைப்பட்டார். மாநில அரசின் மீது குற்றச்சாட்டுகள் வரத்தான் செய்யும். ஆனால் மகாவிகாஸ் அகாடி அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அரசின் தூண்கள் அனைத்தும் உறுதியாக உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸை செலுத்திக்கொண்டார் சரத் பவார்
கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸை சரத் பவார் எடுத்துக்கொண்டார்.
2. புதிய வேளாண் சட்டம் பற்றிய சரத்பவாரின் தகவல் தவறானது: வேளாண் துறை அமைச்சர்
புதிய வேளாண் சட்டம் குறைந்தப்பட்ச கொள்முதல் விலையில் பாதிப்பை ஏற்படுத்தும் என சரத்பவார் விமர்சித்து இருந்தார்.
3. பஞ்சாப் மட்டும் என்ன பாகிஸ்தானிலா உள்ளது? மத்திய அரசு மீது சரத் பவார் கடும் தாக்கு
போராடும் விவசாயிகள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என மத்திய அரசு சொல்கிறது. பஞ்சாப் மட்டும் என்ன பாகிஸ்தானிலா உள்ளது? அதுவும் நம் நாட்டின் ஒரு பகுதிதான் என சரத் பவார் விமர்சித்துள்ளார்.