தேசிய செய்திகள்

பா.ஜனதா அரசு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக பேச்சு: கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவை தரக்குறைவாக பேசுவது சித்தராமையாவுக்கு அழகல்ல; மந்திரி ஈசுவரப்பா சாடல் + "||" + Talk that the BJP government is in the intensive care unit: It is not fair for siddaramaiah to speak poorly of CM Yediyurappa: Minister Eshwarappa Sandal

பா.ஜனதா அரசு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக பேச்சு: கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவை தரக்குறைவாக பேசுவது சித்தராமையாவுக்கு அழகல்ல; மந்திரி ஈசுவரப்பா சாடல்

பா.ஜனதா அரசு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக பேச்சு: கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவை தரக்குறைவாக பேசுவது சித்தராமையாவுக்கு அழகல்ல; மந்திரி ஈசுவரப்பா சாடல்
முதல்-மந்திரி எடியூரப்பாவை தரக்குறைவாக பேசுவது சித்தராமையாவுக்கு அழகல்ல என்று மந்திரி ஈசுவரப்பா கூறினார்.

மந்திரி ஈசுவரப்பா

சட்டசபை எதிர்க்கட்சித்தலைவர் சித்தராமையா, முதல்-மந்திரி எடியூரப்பா ஆஸ்பத்திரியில் உள்ளதாகவும், பா.ஜனதா அரசு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் சிவமொக்கா மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மந்திரி ஈசுவரப்பா கலந்து கொண்டார்.

கூட்டம் முடிந்ததும் மந்திரி ஈசுவரப்பா வெளியே வந்தார். அப்போது நிருபர்கள், மந்திரி ஈசுவரப்பாவிடம் கர்நாடக பா.ஜனதா அரசு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக சித்தராமையா பேசியது குறித்து கேள்வி கேட்டனர். 

இதற்கு பதிலளித்து மந்திரி ஈசுவரப்பா கூறியதாவது:-

அநாகரீகமாக...

சித்தராமையா, தான் ஒரு முன்னாள் முதல்-மந்திரி என்பதை மறந்து, பொது இடங்களில் அநாகரீகமாக பேசுகிறார். அவர், முதல்-மந்திரியாக இருந்தபோது எவ்வாறு செயல்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது மற்றவர்களை மதிக்காமல் தரக்குறைவாக பேசி வருகிறார். முதல்-மந்திரியாக இருந்த ஒருவர் எப்படி இவ்வாறு மாறினார் என்பது எனக்கு தெரியவில்லை. மனநிலை பாதிக்கப்பட்டவர்போல் சித்தராமையா பேசி வருகிறார். முதல்-மந்திரி எடியூரப்பா குறித்து தரக்குறைவாக பேசுவது சித்தராமையாவுக்கு அழகல்ல.

இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் இன்றி பா.ஜனதாவுக்கு எதிரான அணி அமையாது: நானா படோலே
காங்கிரஸ் இன்றி பா.ஜனதாவுக்கு எதிரான அணி அமையாது என்று நானா படோலே கூறியுள்ளார்.
2. முதல்-மந்திரி மாற்றம் இல்லை என்றால் எடியூரப்பாவுக்கு எதிராக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? சித்தராமையா கேள்வி
முதல்-மந்திரி எடியூரப்பா மாற்றம் செய்யப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
3. மராத்தா இடஒதுக்கீடு கேட்டு மாநிலம் தழுவிய போராட்டம்: பா.ஜனதா எம்.பி சம்பாஜிராஜி அறிவிப்பு
மராத்தா இடஒதுக்கீடு கேட்டு மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட போவதாக பா.ஜனதா எம்.பி. அறிவித்து உள்ளார்.
4. சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் உத்தரபிரதேச அரசியல் கட்சிகள்; பா.ஜ.க.வின் கூட்டணி கட்சிக்கு வலைவீசும் அகிலேஷ்
உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த வருடம் நடைபெற இருக்கும் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராக தொடங்கி விட்டன. பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்ற அப்னா தளம் (எஸ்) கட்சிக்கு அகிலேஷ் சிங் யாதவ் வலைவிரித்துள்ளார்.
5. பா.ஜனதா நிவாரண பணிகளை மேற்கொள்கிறது எதிர்க்கட்சிகள் தனிமைப்படுத்தலில் இருக்கின்றன: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
கொரோனாவுக்கு மத்தியிலும் பா.ஜனதா நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகையில், எதிர்க்கட்சிகள் தனிமைப்படுத்தலில் இருப்பதாக ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.