காங்கிரஸ் மூத்த தலைவர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு


காங்கிரஸ் மூத்த தலைவர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு
x
தினத்தந்தி 22 April 2021 4:53 AM GMT (Updated: 22 April 2021 4:53 AM GMT)

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அசோக்குமார் வாலியா கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் அசோக்குமார் வாலியாவும் ஒருவர். 72 வயதான வாலியா டெல்லியில் ஷீலா தேக்‌ஷித் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது அந்த அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார்.

அவர் டெல்லி காங்கிரஸ் அரசில் சுகாதாரத்துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார். இவர் 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த தேர்தலில் டெல்லி கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட அசோக்குமார் வாலியா ஆம் ஆத்மி வேட்பாளர் எஸ்கே பஹாவிடம் தோல்வியடைந்தார். டாக்டரான வாலியா டெல்லி லட்சுமி நகரில் மருத்துவ கிளினிக் வைத்துள்ளார்.

இதற்கிடையில், அசோக்குமார் வாலியாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக்குமார் வாலியா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வாலியாவின் உயிரிழப்பிற்கு பல்வேறு கட்சியினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story