பெங்களூருவில் கொரோனா சிகிச்சைக்காக 28 சட்டசபை தொகுதிகளுக்கு தலா ரூ.25 லட்சம் ஒதுக்கீடு


பெங்களூருவில் கொரோனா சிகிச்சைக்காக 28 சட்டசபை தொகுதிகளுக்கு தலா ரூ.25 லட்சம் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 24 April 2021 6:24 PM GMT (Updated: 24 April 2021 6:24 PM GMT)

கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க பெங்களூருவில் உள்ள 28 சட்டசபை தொகுதிகளுக்கும் தலா ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை மற்றும் மருந்துகள் கிடைக்கவும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, பெங்களூருவில் உள்ள 28 சட்டசபை தொகுதிகளுக்கும் தலா ரூ.25 லட்சத்தை மாநகராட்சி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு ஆகும் சிகிச்சை செலவான மருந்துகள், மாத்திரைகள் மற்றும் பிற உபகரணங்களை வாங்க, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த நிதி செலவு செய்யப்படுவது குறித்து மாநகராட்சியின் சுகாதாரத்துறை தலைமை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குப்தா தெரிவித்துள்ளார்.

Next Story