நாடு முழுவதும் பயணித்த 20 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்; 1,125 டன் திரவ ஆக்சிஜன் வினியோகம்


நாடு முழுவதும் பயணித்த 20 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்; 1,125 டன் திரவ ஆக்சிஜன் வினியோகம்
x
தினத்தந்தி 3 May 2021 8:29 PM GMT (Updated: 3 May 2021 8:29 PM GMT)

ஆக்சிஜன் வினியோகம் பற்றி மத்திய ரெயில்வே அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி, 

மத்திய ரெயில்வே அமைச்சகம், ஆக்சிஜன் வினியோகம் பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் 20 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுவதாகவும், அவற்றின் மூலம் 76 டேங்கர்களில் இதுவரை 1,125 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் பல்வேறு நகரங்களுக்கு வினியோகிக்கப்பட்டு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலம் வாரியாக மகாராஷ்டிரா 174 டன், உத்தரபிரதேசம் - 430.51 டன், மத்திய பிரதேசம் 156.96 டன், டெல்லி 190 டன், அரியானா -109.71 டன், தெலுங்கானா 63.6 டன் திரவ ஆக்சிஜன் வினியோகிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 7 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 422 டன் திரவ ஆக்சிஜனை சுமந்து சென்றுள்ளதாகவும், அதில் டெல்லிக்கு 3-வது முறையாக ஒரு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் 120 டன் ஆக்சிஜனை சுமந்து சென்றிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த ரெயில் இன்று (செவ்வாய்) டெல்லியை சென்றடையும் என்று தெரிகிறது. இந்த தகவல்களை ரெயில்வே மந்திரி வெளியிட்டுள்ளார்.

Next Story