‘மேற்கு வங்காளத்தில் வன்முறையை கட்டுப்படுத்துங்கள்’ - மம்தாவுக்கு, காங்கிரஸ் கண்டிப்பு
மேற்கு வங்காளத்தில் வன்முறையை கட்டுப்படுத்துங்கள் என்று மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் கட்சி கண்டித்துள்ளது.
புதுடெல்லி,
மேற்கு வங்காள மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறைகளில் இறங்கி உள்ளனர்.
இது பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளின் கண்டனத்துக்கு வழி வகுத்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் கண்டித்துள்ளது. இதுபற்றி மேற்கு வங்காள மாநிலத்துக்கான காங்கிரஸ் பொறுப்பாளர் ஜிதின் பிரசாதா டுவிட்டரில் நேற்று பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர், “தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் தொண்டர்கள் மீது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல. மேற்கு வங்காளம் இந்த சட்டவிரோத நிலைக்கு வாக்கு அளிக்கவில்லை என்று நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சக்திசிங் கோகில் கூறும்போது, “ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடம் இல்லை. வங்காளத்தில் மம்தா பானர்ஜி வன்முறையை கட்டுப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என குறிப்பிட்டார்.
Related Tags :
Next Story