தேசிய செய்திகள்

துன்பத்தை ஏற்று கொள்வது தான் மகிழ்ச்சி; இன்ஸ்டாகிராமில் ஓவியத்தை வெளியிட்ட பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் + "||" + It is joy to accept suffering; Actor Shahid Kapoor Shares his version of happiness

துன்பத்தை ஏற்று கொள்வது தான் மகிழ்ச்சி; இன்ஸ்டாகிராமில் ஓவியத்தை வெளியிட்ட பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர்

துன்பத்தை ஏற்று கொள்வது தான் மகிழ்ச்சி; இன்ஸ்டாகிராமில் ஓவியத்தை வெளியிட்ட பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர்
பாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் ஷாகித் கபூர். தனது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ஒரு ஓவியத்தின் படத்தை ஷாகித் கபூர் வெளியிட்டுள்ளார்.

அந்த ஓவியத்தில் ஒரு உடைந்த கட்டிலில் ஒரு குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியான முகத்துடன் தூங்கி கொண்டிருக்கின்றனர். இருண்ட அறையில், கூரை ஒழுகும் நிலையிலும், மோசமான ஏழ்மையிலும் அவர்களது முகத்தில் மகிழ்ச்சி திளைக்கிறது. சமூக வலைத்தளத்தில் இந்த பதிவுக்கு மகிழ்ச்சியின் புகைப்படம் என ஷாகித் கபூர் பெயரிட்டுள்ளார்.

இந்த ஓவியத்தை துருக்கியை சேர்ந்த நசீம் ஹிக்மத் என்ற பிரபல ஓவியர் வரைந்துள்ளார். மேலும் இந்த படத்தை பதிவு செய்து மகிழ்ச்சி என்பது துன்பங்கள் இல்லாமல் இருப்பது அல்ல. அதை ஏற்று கொள்வது ஆகும். சிந்தனையை தூண்டுகிறது என்று ஷாகித் கபூர் கூறியுள்ளார். அவர் இதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பின்னர் அவரை பின்தொடர்பவர்கள் பலர் இந்த படத்தை ஷேர் செய்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சினிமாவில் நடித்தது நிஜத்தில் நடக்கிறது: நடிகர் வடிவேல்
நகைச்சுவை நடிகர் வடிவேல் கொரோனா விழிப்புணர்வு குறித்து வீடியோவில் பேசி இருப்பதாவது:-
2. டாக்டர்களை இழிவுப்படுத்தியதாக நகைச்சுவை நடிகர் மீது வழக்குப்பதிவு
டாக்டர்களை இழிவுப்படுத்தியதாக நகைச்சுவை நடிகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
3. கேரளாவில், கைவசம் இருந்த ஒரு தொகுதியையும் இழந்த பா.ஜனதா; ‘மெட்ரோமேன்’ ஸ்ரீதரன், நடிகர் சுரேஷ் கோபி போராடி தோல்வி
கேரளாவில், தனது கைவசம் இருந்த ஒரு தொகுதியையும் பா.ஜனதா இழந்தது. மெட்ரோமேன் ஸ்ரீதரன், நடிகர் சுரேஷ் கோபி ஆகியோர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியபோதிலும், இறுதியில் தோல்வி அடைந்தனர்.
4. நடிகர் விவேக் இறப்புக்கும், தடுப்பூசிக்கும் சம்பந்தம் இல்லை; இளைஞர்களின் பங்களிப்பு இருந்தால் கொரோனாவை வெல்ல முடியும்; கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தல்
நடிகர் விவேக் இறப்புக்கும், தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இளைஞர்களின் பங்களிப்பு இருந்தால் கொரோனாவை வெல்ல முடியும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
5. ‘சினிமாவில் நடிப்பது ஏன்?’’ வீரப்பன் மகள் விளக்கம்
சந்தன மர கடத்தல் மன்னன் வீரப்பனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி, ‘மாவீரன் பிள்ளை’ என்ற படத்தில் வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறார்.