கேரளாவில் 4 மாவட்டங்களில் நாளை முதல் மும்மடங்கு ஊரடங்கு


கேரளாவில் 4 மாவட்டங்களில் நாளை முதல் மும்மடங்கு ஊரடங்கு
x
தினத்தந்தி 15 May 2021 4:29 PM GMT (Updated: 15 May 2021 4:29 PM GMT)

கேரளத்தில் 4 மாவட்டங்களில் நாளை நள்ளிரவு முதல் மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம், 

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக கடந்த 8 ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.  மே 23 ஆம் தேதி வரை தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. 

இந்த நிலையில் கேரளத்தில் 4 மாவட்டங்களில் நாளை நள்ளிரவு முதல் மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் இன்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  பினராயி விஜயன் கூறுகையில் “ திருவனந்தபுரம், எர்ணாகுளம், திரிச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நாளை நள்ளிரவு முதல் மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும். மகாராஷ்டிரம் மற்றும் குஜராத்தில் காணப்படும் பூஞ்சை தொற்று கேரளத்திலும் காணப்படுகின்றன. இதுதொடர்பான மாதிரிகள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டு வருகின்றன” என்றார். 

Next Story