உத்தரகாண்ட்: 10 நாட்களில் 9 வயதுக்கு உட்பட்ட ஆயிரம் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு


உத்தரகாண்ட்:  10 நாட்களில் 9 வயதுக்கு உட்பட்ட ஆயிரம் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 16 May 2021 11:26 AM GMT (Updated: 16 May 2021 11:26 AM GMT)

உத்தரகாண்டில் கடந்த 10 நாட்களில் 9 வயதுக்கு உட்பட்ட ஆயிரம் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

டேராடூன்,

உத்தரகாண்டில் கொரோனா பாதிப்புக்கு 79,379 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுவரை 4,426 பேர் உயிரிழந்து உள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், மாநிலத்தில் கடந்த 10 நாட்களில் 9 வயதுக்கு உட்பட்ட ஆயிரம் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என உத்தரகாண்ட் சுகாதார துறை தெரிவித்துள்ளது.

இதுபற்றி துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கடந்த ஓராண்டில், 2,131 குழந்தைகள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

ஆனால், இந்த ஆண்டில் ஏப்ரல் தொடக்கத்தில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியபொழுது, ஏப்ரல் 1ந்தேதி முதல் ஏப்ரல் 15ந்தேதி வரையில் 264 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அதன்பின்னர் ஏப்ரல் 16-30 ஆகிய நாட்களில் 1,053 குழந்தைகளுக்கும் மற்றும் மே 1-14 ஆகிய நாட்களில் மொத்தம் 1,618 குழந்தைகளுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story