தேசிய செய்திகள்

‘ஏழைகளுக்கு ரூ.6 ஆயிரம் வங்கிக்கணக்குகளில் செலுத்த வேண்டும்’மோடிக்கு காங்கிரஸ் கோரிக்கை + "||" + 6,000 per month for the poor; Congress leader Adhir Ranjan Chaudhary insists

‘ஏழைகளுக்கு ரூ.6 ஆயிரம் வங்கிக்கணக்குகளில் செலுத்த வேண்டும்’மோடிக்கு காங்கிரஸ் கோரிக்கை

‘ஏழைகளுக்கு ரூ.6 ஆயிரம் வங்கிக்கணக்குகளில் செலுத்த வேண்டும்’மோடிக்கு காங்கிரஸ் கோரிக்கை
‘ஏழைகளுக்கு ரூ.6 ஆயிரம் வங்கிக்கணக்குகளில் செலுத்த வேண்டும்’ என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி, 

பிரதமர் மோடிக்கு மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு போட்டிருப்பதால் ஏழைகள், தினக்கூலிகள், சமூகத்தின் விளிம்பு நிலை மக்கள் மிகுந்த கஷ்டங்களுக்கும், துன்பங்களுக்கும் ஆளாகி இருப்பதாக கூறி உள்ளார்.

இந்த நிலையில், மேற்கு வங்காளம் உள்ளிட்ட முழு ஊரடங்கு போட்டுள்ள மாநிலங்களில் தகுதி வாய்ந்த ஏழை எளிய மக்களுக்கு அவர்தம் வங்கிக்கணக்குகளில் மாதம் ரூ.6 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இது கோடிக்கணக்கான ஏழை மக்களின் துன்பங்களைத்தணிப்பதுடன், நாட்டின் பொருளாதாரத்துக்கும் நன்மை பயக்கும் என சுட்டிக்காட்டி இருக்கிறார்.இந்த கோரிக்கையை கடந்த ஆண்டு தேசிய அளவில் ஊரடங்கு போட்ட காலம்தொட்டு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. புதிய கல்விக் கொள்கை உருவாக்கி ஓராண்டு நிறைவு: பிரதமர் மோடி நாளை உரை
புதிய கல்விக் கொள்கை உருவாக்கி ஓராண்டு நிறைவு பெற உள்ள பிரதமர் மோடி நாளை உரையாற்ற உள்ளார்.
2. கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பாவை பாராட்டி பிரதமர் மோடி டுவிட்
கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பாவை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டியுள்ளார்.
3. உத்தர பிரதேச சாலை விபத்து: பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் - பிரதமர் மோடி அறிவிப்பு
உத்தர பிரதேச சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
4. டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் மம்தா பானர்ஜி
5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அவர், இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேச உள்ளார்.
5. கண்ணீருடன் பதவியை ராஜினாமா செய்தது பற்றி மக்களுக்கு சொல்வீர்களா? எடியூரப்பாவுக்கு கர்நாடக காங்கிரஸ் கேள்வி
கண்ணீருடன் பதவியை ராஜினாமா செய்தது குறித்து மக்களுக்கு சொல்வீர்களா? என்று எடியூரப்பாவுக்கு கர்நாடக காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.