முக கவசங்களை முறையாக அணியாத நபர்களுக்கு உத்தரகாண்டில் ரூ.1,000 வரை அபராதம்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 22 May 2021 8:35 PM GMT (Updated: 22 May 2021 8:35 PM GMT)

உத்தரகாண்டில் முக கவசங்களை முறையாக அணியாத நபர்களுக்கு ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

டேராடூன்,

உத்தரகாண்டில் கொரோனாவின் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.  இதுவரை 3.08 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்படைந்து உள்ளனர்.  அவர்களில் 2.39 லட்சம் பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.

இதுவரை மொத்தம் 5,600 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால், தொற்றை கட்டுப்படுத்த மக்கள் கொரோனா விதிகளை முறையாக கடைப்பிடிக்க அரசு வலியுறுத்தி வருகிறது.

இதன்படி முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது ஆகியவற்றை முறையாக கடைப்பிடிக்கும்படி கூறப்பட்டு வருகிறது.

எனினும், மக்களில் சிலர் இதனை சரியாக பின்பற்றுவதில்லை.  இந்நிலையில், டி.ஜி.பி. அசோக் குமார் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, முக கவசங்களை அணிபவர்கள் அவற்றை முறையாக அணியாமல் சுற்றினால் அந்த நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்.

இதுபோன்ற நபர்களுக்கு முதல் முறை என்றால் ரூ.500 அபராத தொகை விதிக்கப்படும்.  2வது முறையும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரூ.700 அபராதம் விதிக்கப்படும்.  அதன்பின்னரும் இந்த விதிமீறல் கண்டறியப்பட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என கூறியுள்ளார்.


Next Story