பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1,029 வாகனங்கள் பறிமுதல்


பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1,029 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 27 May 2021 8:14 PM GMT (Updated: 27 May 2021 8:14 PM GMT)

பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1,029 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பெங்களூரு,

பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுக்கு கொண்டு வருவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் சுற்றி திரியும் வாகன ஓட்டிகளிடம் இருந்து போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

இந்த நிலையில், நேற்றும் ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் சுற்றுபவர்களை பிடிக்க போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு நபர்கள் பொய் தகவல்களை கூறி தேவையில்லாமல் சுற்றி திரிந்தது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று ஒரே நாளில் 1,029 வாகனங்களை போலீசாா் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றில் 926 இருசக்கர வாகனங்கள் ஆகும். அதுபோல், 49 மூன்று சக்கர வாகனங்கள், 54 நான்கு சக்கர வாகனங்களும் அடங்கும். அதே நேரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதுடன், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் என 47 பேர் மீது என்.டி.எம்.ஏ. சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story