மும்பையில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு குறைந்தது


மும்பையில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு குறைந்தது
x
தினத்தந்தி 29 May 2021 6:15 AM GMT (Updated: 29 May 2021 6:15 AM GMT)

மராட்டியத்தில் கடந்த மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது.

மும்பை,

மராட்டியத்தில் கடந்த மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 20 ஆயிரத்து 740 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. 

தலைநகர் மும்பையில் இந்த மாதத்தில் 2-வது முறையாக பாதிப்பு ஆயிரத்தைவிட குறைந்து உள்ளது. நேற்று நகரில் புதிதாக 929 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 18-ந் தேதி நகரில் 953 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. 

இதேபோல மார்ச் 2-ந்தேதிக்கு பிறகு மும்பையில் பதிவான குறைந்தபட்ச பாதிப்பு இதுவாகும். மேலும் பலி எண்ணிக்கையும் குறைந்து உள்ளது. நேற்று நகரில் 30 பேர் பலியானார்கள். கடந்த மாதம் 13-ந் தேதிக்கு பிறகு நகரில் பதிவாகி உள்ள குறைந்த பலி எண்ணிக்கை இதுவாகும்.

நகரில் இதுவரை 7 லட்சத்து 3 ஆயிரத்து 461 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 808 பேர் உயிரிழந்து உள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 94 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். நகரில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 370 நாட்களாக அதிகரித்து உள்ளது. தாராவியில் நேற்று புதிதாக 4 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.

Next Story