தேசிய செய்திகள்

ஜூன் மாதத்தில் ‘10 கோடி தடுப்பூசி தயாரித்து வழங்குவோம்’; மத்திய அரசுக்கு சீரம் நிறுவனம் கடிதம் + "||" + ‘We will produce and distribute 10 crore vaccines in June’; Manufacturing Company Letter to the Central Government

ஜூன் மாதத்தில் ‘10 கோடி தடுப்பூசி தயாரித்து வழங்குவோம்’; மத்திய அரசுக்கு சீரம் நிறுவனம் கடிதம்

ஜூன் மாதத்தில் ‘10 கோடி தடுப்பூசி தயாரித்து வழங்குவோம்’; மத்திய அரசுக்கு சீரம் நிறுவனம் கடிதம்
ஜூன் மாதத்தில் 10 கோடி டோஸ் தடுப்பூசியை உற்பத்தி செய்து வழங்குவதற்கு எங்களால் முடியும் என்று மத்திய அரசுக்கு இந்திய சீரம் நிறுவனம் கடிதம் எழுதி உள்ளது.
சீரம் நிறுவனம் கடிதம்
கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்து வழங்கும் புனே இந்திய சீரம் நிறுவனம் சார்பில், அதன் அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகார இயக்குனர் பிரகாஷ்குமார் சிங், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளது. 

அதில் கூறி இருப்பதாவது:-
பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் எங்கள் ஊழியர்கள் 24 மணிநேரமும் பணியாற்றி வருகிறார்கள். மே மாதத்தில் எங்கள் உற்பத்தித்திறன் 6.5 கோடிகளாக இருந்தது.

10 கோடி டோஸ் தடுப்பூசி
இருப்பினும் ஜூன் மாதத்தில் எங்களால் 9 முதல் 10 கோடி வரையிலான தடுப்பூசி டோஸ்களை உற்பத்தி செய்து வழங்க முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். கொரோனா தடுப்பூசியில் இந்தியா சுய சார்பு அடைவதற்காகவும், மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதற்காகவும் உங்களது மதிப்புமிக்க வழிகாட்டுதல்களுக்கும், தொடர் ஆதரவுக்கும் நன்றி.கொரோனாவில் இருந்து நாட்டு மக்களையும், உலகையும் காப்பதற்கு இந்திய சீரம் நிறுவனம் எப்போதுமே உண்மையான அக்கறை கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசுடன் எங்கள் தலைமைச்செயல் அதிகாரி ஆதர்பூனவாலா தலைமையில் எங்கள் குழு இடைவிடாமல் தோளோடு தோள் நின்று செயல்படுகிறது.

எல்லா வளங்களையும் பயன்படுத்துவோம்...
மத்திய அரசின் ஆதரவாலும், உங்கள் வழிகாட்டுதலாலும் வரும் மாதங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசியின் உற்பத்தியைப் பெருக்குவதற்கு எங்கள் எல்லா வளங்களையும் முடிந்தவரை பயன்படுத்த முயற்சிக்கிறோம் என்ற உறுதியை அளிக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தொலைதூர பகுதிகளுக்கு தடுப்பூசிகளை கொண்டு செல்ல டிரோன்களை பயன்படுத்த மத்திய அரசு அழைப்பு
தொலைதூர பகுதிகளுக்கு தடுப்பூசிகளை கொண்டு செல்வதற்கு டிரோன்களை பயன்படுத்தும் முயற்சிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
2. 21-ந் தேதி நடைமுறைக்கு வரும் கொள்கையில் “தடுப்பூசி கொள்முதல் பற்றி தெளிவு இல்லை; சரியான வழிகாட்டுதல்கள் தேவை”; மத்திய அரசுக்கு தனியார் ஆஸ்பத்திரிகள் கோரிக்கை
புதிய தடுப்பூசி கொள்கையில், தனியார் ஆஸ்பத்திரிகள் தடுப்பூசி வாங்குவது பற்றி தெளிவு இல்லை என்றும், சரியான வழிகாட்டுதல்கள் தேவை என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
3. கொரோனா பெருந்தொற்று தொடர்பாக நிபுணர்கள் ஆலோசனைகள்; மத்திய அரசு நாடுகிறது
சமீபத்தில் பிரதமர் மோடியிடம் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள், கொரோனா தொடர்பான தேசிய பணிக்குழு உறுப்பினர்கள் அடங்கிய பொது சுகாதார நிபுணர்கள் அறிக்கை ஒன்றை அளித்தனர்.
4. 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் திட்டம்; மத்திய அரசு தொடங்கியது
6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
5. ‘தடுப்பூசி வீணாவதை ஒரு சதவீதத்துக்குள் குறைக்க வேண்டும்’; மத்திய அரசு வலியுறுத்தல்
தடுப்பூசி வீணாவதை ஒரு சதவீதத்துக்குள் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.