தேசிய செய்திகள்

மோடி அரசின் கொள்கை இல்லா தடுப்பூசி திட்டம் - ராகுல் காந்தி விமர்சனம் + "||" + Modi Govt’s non vaccination strategy is a dagger in Bharat Mata’s heart Rahul Gandhi

மோடி அரசின் கொள்கை இல்லா தடுப்பூசி திட்டம் - ராகுல் காந்தி விமர்சனம்

மோடி அரசின் கொள்கை இல்லா தடுப்பூசி திட்டம் - ராகுல் காந்தி விமர்சனம்
கொரோனாவுக்கு பிறகு 97 சதவீத இந்தியர்கள் மேலும் ஏழைகளாக மாறியிருப்பதாக ராகுல்காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி, 

மத்திய அரசு கொரோனாவை கையாளும் விதம் மற்றும் பின்பற்றி வரும் தடுப்பூசி கொள்கையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குறைகூறி வருகிறார். குறிப்பாக மத்திய அரசு தடுப்பூசி திட்டத்தில் எந்த கொள்கையையும் கொண்டிருக்கவில்லை என அவர் சாடியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘மோடி அரசின் கொள்கை இல்லா தடுப்பூசி திட்டம், அன்னை இந்தியாவின் இதயத்தில் வாளாக குத்துகிறது. சோகமான உண்மை’ என குறிப்பிட்டு இருந்தார்.

இதைப்போல கொரோனாவுக்கு பிறகு இந்தியாவில் வேலையில்லா திண்டாட்ட விகிதம் இரட்டை இலக்கத்தில் சென்றிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்திகளை சுட்டிக்காட்டி பிரதமர் மோடியையும் அவர் கண்டித்துள்ளார்.

‘ஒரு மனிதரும், அவரது ஆணவமும் மற்றும் ஒரு வைரசும், அதன் மாறுபாடுகளும்’ என மற்றொரு பதிவில் குறிப்பிட்டு இருந்த ராகுல் காந்தி, கொரோனாவுக்கு பிறகு 97 சதவீத இந்தியர்கள் மேலும் ஏழைகளாக மாறியிருப்பதாகவும் கூறியுள்ளார்.