குஜராத்: காய்கறி சந்தையில் காற்றில் பறந்த சமூக இடைவெளி - கொரோனா 3-வது அலை அச்சம்


குஜராத்: காய்கறி சந்தையில் காற்றில் பறந்த சமூக இடைவெளி - கொரோனா 3-வது அலை அச்சம்
x
தினத்தந்தி 9 Jun 2021 7:01 AM GMT (Updated: 9 Jun 2021 7:01 AM GMT)

குஜராத்தில் காய்கறி சந்தை பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் சமூக இடைவெளியின்றி நடமாடிய நிகழ்வு வைரஸ் பரவலை மேலும் அதிகரிக்ககூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மெல்லமெல்ல குறையத்தொடங்கியுள்ளது. இதனால், பல்வேறு மாநிலங்களில் அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், மக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் மக்கள் கூட்டமாக குவிந்து வருகின்றனர்.

அந்த வகையில், குஜராத்தின் வாரணாசியில் உள்ள காய்கறி சந்தியில் கொரோனா தடுப்பு விதிகளை இன்று காலை நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர். 

சமூக இடைவெளியின்றியும், முகக்கவசம் அணியாமலும் மக்கள் காய்கறி சந்தையில் குவிந்ததால் வாரணாசியில் கொரோனா வைரஸ் 3-வது அலை உருவாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. 

Next Story